திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலை பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவன் ஆனந்தராஜ் 482 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் இன்று (மே 16) பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் மாணவனின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.