தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் வருகின்ற 8ஆம் தேதி மாலை 5. 30 மணிக்கு மேலவாசல் சஷ்டி விநாயகர் முன்பாகவும் ஆறுமுக நயினார் சன்னதி முன்பாகவும் விசாக வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க விழாக் குழுவினர் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.