தமிழ்நாடு அரசு அலுவலர் மாநில தலைவர் அமிர்த குமார் திருநெல்வேலி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பொறுப்பு மாவட்ட தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையை சேர்ந்த விக்னேஷ் கண்ணனை நியமித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய திருநெல்வேலி மாவட்ட தலைவராக விக்னேஷ் கண்ணன் பொறுப்பேற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.