நெல்லையில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஜல் நீட்டு அகாடமியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதன் உரிமையாளரை உடனடியாக கைது செய்திட வேண்டும் எனவும், தகுந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் காங்கிரஸார் இன்று மாலை மேலப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.