திருநெல்வேலி மாநகராட்சியில் தற்பொழுது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் சிப்பம் 3 பகுதி 3ல் திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட கேடிசி டிப்போ அருகில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாக கலெக்டர் சுகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தார்.