சுயநினைவற்றவரைப் போல பிதற்றித் திரிகிறார் அண்ணாமலை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிற அண்ணாமலை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.