சேரன் மகாதேவியில் உலக கல்லீரல் அழற்சி தின பேரணி

56பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன் மகதேவியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் k. சாந்தி ஏற்பாட்டில் கிராம உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் அரசு மருத்துவமனை சேரன் மகா தேவி இணைந்து உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது. முகாமை அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ அலுவலர் சாந்தி சுசீந்திரன் மற்றும் கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன் மற்றும் புகழேந்தி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் முது நிலை மருத்துவர் அமுதா தேவி மற்றும் பல் மருத்துவர் மீனலோசனி கிராமோதயா தொடர்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காந்தி பூங்காவில் முடிவடைந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி