அம்பை அருகே பெண்ணை அவதூறாக பேசி தாக்கிய இருவர் கைது

1117பார்த்தது
அம்பை அருகே பெண்ணை அவதூறாக பேசி தாக்கிய இருவர் கைது
நெல்லை மாவட்டம் அம்பை அருகே அயன்சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் பிடித்து கொண்டு இருந்த போது, அவ்வழியாக அதே தெருவை சேர்ந்த வனசுந்தர் மற்றும் ஒருவர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். ‌ இதனை பார்த்த மகாலட்சுமி ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வனசுந்தர் மற்றும் ஒருவர் சேர்ந்து மகாலட்சுமியை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி கையால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். இதுகுறித்து மகாலட்சுமி மணிமுத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பேரில் வனசுந்தர், மற்றும் நண்பர் கைது செய்ய பட்டனர்

தொடர்புடைய செய்தி