நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள பதிவேடுகள் மற்றும் மூலிகை தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார். மருத்துவமனைக்கு வந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் இசக்கி பாண்டியன் உடன் இருந்தார்