“அமைச்சர் மீதான பாதுகாப்பு அத்துமீறல்” - இந்தியா கண்டனம்

71பார்த்தது
“அமைச்சர் மீதான பாதுகாப்பு அத்துமீறல்” - இந்தியா கண்டனம்
லண்டன் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் காரை வழிமறித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், முழக்கமிட்டபடி இந்தியக் கொடியை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பார் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ''பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கத்தின் செயலை கண்டிக்கிறோம். ஜனநாயக அரசு அளித்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் இச்செயல், கவலை தருகிறது. சம்மந்தப்பட்ட அரசு கடமையை உணர்ந்து செயல்படும் என நம்புகிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி