ஒடிசா: மயூர்பஞ்ச் மாவட்டத்தில் புகைப்பிடிக்க ரூ.10 கொடுக்காத தந்தையின் தலையை மகன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது இளைஞர் ஒருவர் தனது 70 வயது தந்தையிடம் குட்கா புகைக்க ரூ.10 கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், இளைஞன் தனது தந்தையின் தலையை வெட்டி கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் சென்று போலீசில் சரணடைந்துள்ளார்.