நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகர்மன்ற பகுதியில் பாபநாசம் சாலையில் சாலை ஓரம் பொதுமக்களை பதம் பார்க்க ஆபத்தான குழி ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர் அந்த குழியில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலை ஓரத்தில் உள்ள அந்த குழியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்