2026லும் அதிமுக பாஜக கூட்டணி கிடையாது

74பார்த்தது
2026லும் அதிமுக பாஜக கூட்டணி கிடையாது
2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருக்க முடியும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கருத்தை ஜெயக்குமார் ஏற்க மறுத்துள்ளார். மேலும் எஸ்.பி.வேலுமணி பேசியது அனுமானத்தின் அடிப்படையில் என அவர் கூறியுள்ளார். பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார். எஸ்.பி.வேலுமணியின் கருத்திற்கு எதிராக ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி