நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் தவறில்லை என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் தவறில்லை. சுதந்திரம் பெற்று 70 ஆண்டு காலம் ஆன பிறகும் குடிநீரின்றி ஒரு கிராமம் உள்ளது என்பது ஏற்க முடியாத ஒன்று. தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடைபெறும் படுகொலைகள் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளியுள்ளது" என்று கூறியுள்ளார்.