தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்