தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சி தமிழர் கட்சியின் சார்பில் வீடு இல்லாத அருந்ததியர் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 196/1. ல் உள்ள பஞ்சமி நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை வீடு இல்லாத ஏழை எளிய அருந்ததியர் சமுதாய மக்களுக்கு வழங்கிட வேண்டும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.