தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் மனு வழங்கும் நிகழ்வு மற்றும் போராட்டம் நடத்த உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லக்கூடிய பொது மக்களிடம் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு விசாரித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகின்றனர்.