அறநெறிகளை பின்பற்றும்படி தளங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓடிடி, சமூக வலைதள நிகழ்ச்சிகளில் ஆபாசம், கொடூர காட்சிகள் வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இக்காட்சிகளால் சிறார்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றைத் தவிர்க்கவும்" என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.