தேனி மாவட்டம் சின்னமனூரில் தேமுதிக சார்பாக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டியும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அத்தியாசிய பொருட்கள் கிடைக்காததை கண்டித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் சின்னமனூர் நகர செயலாளர் முருகன் உட்பட நகர் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்