தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தேனி வள்ளிநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரான வேல்முருகன், உமாதேவி திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாங்கள் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் தங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு பெற்று தருவதாக கூறி தேனியை சேர்ந்த உலகநாதன் என்பவர் 20, 000 கொண்டு தங்களை ஏமாற்றியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர் கணவன் மனைவி கர்ணாவில் ஈடுபட்டனர்