தேனியில் சிவமுருகன் அறக்கட்டளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் இந்து நாடார்கள் பசுமை அபிவிருத்தி பண்ணு இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு சமூக அமைப்பினை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்து சிறப்பித்தனர்.
சேகரிக்கப்பட்ட இரத்த நாளங்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பி வைக்கப்பட்ட இரத்தங்கள் விபத்து மற்றும் அவசர பிரசவ காலங்களுக்காக பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்