உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு , தேசிய பசுமைப்படை சார்பில், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாகொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில், வளாகத்தை சுற்றிலும் அரசு, வேம்பு, புங்கை என பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜாபர் சித்திக் மற்றும் பள்ளியின் பசுமை படை பொறுப்பாளர் மல்லிகா தேவி, உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.