தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் குச்சனூரில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போஒது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மருதுபாண்டி (29), தருமக் கண் (68), அன்னக்கொடி (25) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 130 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.