தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் செயல்படுத்த உள்ள அரசு திட்டப்பணிகளான ஆம்னி பேருந்து நிலையம், தற்போதைய பேருந்து நிலைய மராமத்து பணி மற்றும் வணிக வளாகக் கட்டிடப் பணிகளை நகராட்சிகளின் மண்டலப் பொறியாளர் கருப்பையா ராஜா நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் நகராட்சி சேர்மன் வனிதா நெப்போலியன், நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.