மதுரை: கணவனை கொலை செய்த மனைவி
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் கரட்டு காலனி சரவணன் (30). செங்கல் காளவாசல் லோடுமேன். இவரது மனைவி ஜோதிகா( 23). இவர்களுக்கு 5 மற்றும் 4 வயதில் மகன், மகள் உள்ளனர். ஜோதிகாவும், வலசை கிராமத்தை சேர்ந்த உடப்பன் என்ற மதனும் (20), நெருங்கி பழகினர். இருவரும் ஓராண்டிற்கு முன் வீட்டை விட்டு சென்றனர். உறவினர்கள் தேடி கண்டுபிடித்து சமரசம் செய்து கடந்த வாரம் ஜோதிகாவை சரவணனுடன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று (அக். 29) அதிகாலை அலைபேசியில் மதனை ஜோதிகா தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். ஜோதிகா வீட்டிற்கு 17 வயது நண்பருடன் போதையில் மதன் வந்தார். துாங்கிக் கொண்டிருந்த சரவணன் கால்களை ஜோதிகா பிடிக்க, கழுத்தை அரிவாளால் அறுத்து மதன் கொலை செய்தார். உடலை மறைக்க முயற்சித்து சிறிது துாரம் தெருவில் துாக்கிச் சென்றனர். நாய்கள் குரைத்ததால் அருகே இருந்த கட்டுமான பகுதியில் உடலை வீசி சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதன், ஜோதிகா, 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.