தீபாவளியன்று காலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை ‘கங்கா ஸ்நானம்’ என புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் கங்கை நதி அனைத்து நீர்நிலைகளிலும் உறைவதாக ஐதீகம். அனைவராலும் கங்கையில் நீராட முடியாது என்பதால், புனித நதிகளில் நீராடலாம். அதுவும் முடியாதவர்கள் வீட்டில் நீராட வேண்டும். அதிகாலை 3:30 மணி முதல் 6:00 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரமாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.