மதுரை: கள்ளத் தொடர்பு; கொடூரக் கொலை

53பார்த்தது
மதுரை: கள்ளத் தொடர்பு; கொடூரக் கொலை
கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர், செங்கல் காளவாசலில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதிகா (23) மற்றும் அலங்காநல்லூரைச் சேர்ந்த உடப்பன் (22) ஆகியோருக்கு கடந்த ஒரு வருடமாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டனர். பின்னர் இருவரையும் தேடி கண்டுபிடித்து இரு தரப்பினரிடம் பேசி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜோதிகா தனது கணவரான சரவணன் உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த உடப்பன் மீது சரவணன் வன்மத்துடன் இருந்துள்ளார். இன்று அதிகாலை உடப்பன் தனது நண்பருடன் சேர்ந்து சரவணன் வீட்டிற்கு சென்று, ஜோதிகாவுடன் சேர்ந்து சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். கொலை செய்த உடப்பன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.