தேனி மாவட்டம், சின்னமனூரில் மின் கட்டணம் செலுத்தும் இடம் திடீரென, நகரின் கடைக்கோடியில் செயற்பொறியாளர் அலுவலகத்தின் மாடியில் மாற்றப்பட்டுள்ளதால், கட்டணம் செலுத்த நீண்ட தூரம் செல்வதோடு, மாடியில் இருப்பதால் வயதானவர்களும், பெண்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பழைய இடத்திலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.