வெஸ்ட் மவுண்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

63பார்த்தது
ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றதை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ஹாக்கி வீரர்கள். ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெங்களப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெண்கல பதக்கத்தை இந்திய ஹாக்கி அணியினர் கைப்பற்றியுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக போடி வெஸ்ட் மவுண்டன் ஹாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் ஹாக்கி வீரர்கள் பயிற்சியாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். போடி பேருந்து நிலையம் அருகாமையில் வாகனத்தில் சென்ற பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்திய ஹாக்கி அணி வெங்களா பதக்கம் வென்றதை கூறி உற்சாகத்தோடு கொண்டாடினர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதாக ஹாக்கி வீரர்கள் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி