ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சமூக ஆர்வலர்

64பார்த்தது
ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சமூக ஆர்வலர்
தேனி, ஜூன் 6:
தேனி அருகே கம்போஸ்ட் ஓடைத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 53 வயது மதிக்கத்தக்க மூதாட்டி. கணவர் இறந்து பிள்ளைகள் இல்லாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். கடந்த சில நாட்களாக கவனிப்பாரன்று கிடந்ததால் உடலில் துர்நாற்றம் ஏற்பட்டது. இது குறித்து பக்கத்து வீட்டார் தேனி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு ம. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன் முதாட்டியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து விட்டார். இந்நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பாராட்டைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி