போடி, ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சுகுமார். இவர் அடிக்கடி குடிபோதையில் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (செப். 20) சுகுமார் குடிபோதையில் தந்தையுடன் கத்தியுடன் தகராறு செய்துள்ளார். கத்தியை சுகுமார் தவறவிட்ட நிலையில் சுப்பிரமணி அந்த கத்தியை எடுத்து சுகுமாரை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.