ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு கேடயம்
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது. அந்த வகையில், தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டத்திலிருந்து கடமலைக்குண்டு காவல் நிலையம் சிறந்தாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் கேடயம் வழங்கி பாராட்டினார்