ருத்ர மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

50பார்த்தது
தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீருத்ர மகா காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கோவில் வளாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசநீரை கோவில் விமான கோபுரத்தில் உள்ள ஐந்து கும்ப கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி