தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி 33வது வார்டு பகுதி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முறையாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகத்தை கண்டித்து இன்று (செப். 13) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் காங்கிரஸ் நகர தலைவர் கோபிநாத் மற்றும் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.