போடியில் ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா துவக்கம்

72பார்த்தது
போடியில் ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா துவக்கம்
போடிநாயக்கனூர் தேவாலய தெருவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடியை நேற்று (ஆக. 29) திரளான கிறிஸ்தவர்கள் பவனியாக எடுத்து வந்தனர். பிறகு புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் கொடிமரத்தின் முன் அந்தக் கொடி புனிதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாண வேடிக்கைகள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தேர்பவனி வருகிற செப். 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி