தஞ்சை: திருவிடைமருதூர் பகுதிகளில் பேருந்து மற்றும் கோயில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் தஞ்சை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (28), நாகப்பட்டினம் கீழவேளுர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (28) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 12 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.