தேனி: 5 நாட்களாக குடிநீர் இன்றி போராட்டத்தில் இறங்கிய மக்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னன்படுகை கிராமத்தில் சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்றும் கடந்த 5 நாட்களாக அடியோடு தண்ணீர் வராமல் நின்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை பொன்னன்படுகை மயிலாடும்பாறை சாலையில் 100க்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்