தேனியில் உள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகவும், மழையின் காரணமாக புழுதியாகவும் காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.