அம்பானி இல்ல திருமணவிழாவில் திருட்டு

565பார்த்தது
அம்பானி இல்ல திருமணவிழாவில் திருட்டு
முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் திருமணம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமண விழாவின் போது ரூ.10 மதிப்பிலான பொருட்களை திருடியதாக திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண விழாவிற்காக வந்தவர்களின் கார் கண்ணாடிகைளை உடைத்து பொருட்களை திருடியதாக எழுந்த குற்றசாட்டையடுத்து நடந்த விசாரணையில் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த ஜெகன் பாலசுப்பிரமணியம், தீபக் பார்த்திபன், குணசேகர் உமாநாத், வீரபத்ரன், அகரம் கண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களின் தலைவன் மதுசூதனனை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி