மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு

89102பார்த்தது
மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகள் ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி