கிண்டல் செய்த இளைஞர்.. இளம்பெண்ணின் கொடூர செயல்..

8212பார்த்தது
கிண்டல் செய்த இளைஞர்.. இளம்பெண்ணின் கொடூர செயல்..
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ள டீ கடைக்கு நேற்று (மே 30) இளைஞர் ஒருவர் டீ சாப்பிட சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் அந்த கடையில் இருந்தார். அப்போது அந்த இளைஞர், இளம்பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண் டீ கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து அந்த இளைஞர் மீது ஊற்றினார். இதில், படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். போலீசார் விசாரணையில், அந்த பெண் தன்னுடைய உறவுக்காரர் என இளைஞர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி