கோத்தகிரி கேரட் விலை திடீர் உயர்வு

67பார்த்தது
கோத்தகிரி கேரட் விலை திடீர் உயர்வு
நீலகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்த படியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மலைக்காய்கறியான கேரட் கோத்தகிரி காய்கறி மண்டியில் ரூ.30 முதல் ரூ.45 வரை விலை போகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் ரூ.45 முதல் ரூ.50 வரை தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி