சிறார்கள் வாகனம் ஓட்டினால் கடும் அபராதம்: புதிய விதிகள்

64பார்த்தது
சிறார்கள் வாகனம் ஓட்டினால் கடும் அபராதம்: புதிய விதிகள்
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் கார் அல்லது வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ்(RC) ரத்து செய்யப்படும். மேலும் சிறார்களுக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். அந்த சிறாருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி