புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நள்ளிரவில் ஒரு பெண் வீட்டிற்கு சென்று, கதவை தட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது வாலிபர் நிர்வாணமாக நின்று கொண்டு, தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார். மேலும், வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், அச்சமடைந்த பெண் சத்தம் போட்டு அலறி கூச்சலிட்டதால், பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். இதை பார்த்து பயந்த வாலிபர் அங்கிருந்து ஓடியுள்ளார். போலீஸார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.