ஈரோடு மஞ்சளுக்கு இணையாக ஜவுளி சந்தையும் உலக அளவில் புகழ்பெற்றது. கொங்கு மண்டலத்தில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பனியன் ஆடைகள், லுங்கி, வேட்டி, சேலை, உள்ளாடை, துண்டு, போர்வை போன்றவை இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது. ஜவுளி சந்தையில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் ஜவுளி வாங்க கூட்டம் அலைமோதும்.