தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த சந்துரு (20) என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சந்துரு மீதிருந்த காதல் குறைய, நாளடைவில் கிங்ஸ்டன் என்பவருடன் சுபாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்துருவை விவாகரத்து செய்யாமலேயே கிங்ஸ்டனுடன் சுபா வாழ்ந்து வந்துள்ளார். இதனை சந்துரு கண்டிக்கவே ஆத்திரமடைந்த கிங்ஸ்டன் வீடு புகுந்து சந்துருவை வெட்டி கொலை செய்துள்ளார். தற்போது கிங்ஸ்டன் மற்றும் மகாராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.