தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விட்டு கிளம்புவதற்காக தனது காரில் ஏறினார். அப்போது சில பெண்கள் உதயநிதியின் காரை வழிமறித்து அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அப்பெண்களை அழைத்த உதயநிதி அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டார்.