பாஜகவை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மோடியின் ஒன்றிய அரசு, அதிகாரம் பெற்ற அமைப்புகளை அரசியல் கருவிகளாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மூலம் மூத்த அமைச்சர், திமுகழத்தின் பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.