உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.