மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆட்டு மந்தை உள்ள இடத்தில் குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் அடைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை ஆடு வியாபாரிகள் திருமண மண்டபத்தில் ஆடுகள் அருகே பாஜக மகளிரணியினர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஆடுகள் இருந்த நிலையில், பாஜகவினர் கைதுக்குப் பிறகு கூடுதலாக ஆடுகள் அடைப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.